சவுதி: ஃபேமிலி விசாவில் 21 வயது குழந்தைகளுக்கு இகாமாவை புதுப்பிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவுப்பு!
ரியாத்: சவூதி அரேபியாவில் ஃபேமிலி விசாவில் 21 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளுக்கு இகாமாவை புதுப்பிப்பதற்கு கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று சவுதி பாஸ்போர்ட் இயக்குநரகம் (ஜவாசாத்) தெரிவித்துள்ளது.
சவுதியில் உள்ள வெளிநாட்டவர்கள் 21 வயது பூர்த்தியடைந்த தங்கள் மகனுக்கு இகாமாவை புதுப்பிக்க விரும்பினால், மகன் மாணவர் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பெற்றோரின் அஷ்ரா விசாவில் சவுதி அரேபியாவில் வசிக்கும் ஆண் குழந்தைகள் 25 வயதை அடையும் போது ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும். ஸ்பான்சர்ஷிப் மாற்றத்தின் போது நாட்டில் இருக்க வேண்டும்.
அதேபோல் சார்பு விசாவில் வசிக்கும் மகள்களின் இகாமாவை புதுப்பிக்க, அவர்கள் திருமணம் ஆகவில்லை என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.