சவுதியில் மழை தொடரும்...! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சவுதியில் மழை தொடரும்...! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் அனைத்து பகுதிகளிலும் வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த வார இறுதி வரை நாட்டில் இதே காலநிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் விலகி இருக்க வேண்டும்.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரிகள் அவ்வப்போது வெளியிடும் எச்சரிக்கைகளை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹைல், அல் காசிம் மற்றும் நாட்டின் பெரும்பாலான கவர்னரேட்டுகளில் மழை பெய்யக்கூடும்.
ரியாத் பகுதியில், சுல்பி, ஷர்கா, மஜ்மா, ரமா, அல் தவாதிமி, அஃபிஃப், அல் முஸாஹிமியா, அல் குவையா மற்றும் அல் கர்ஜ் ஆகிய மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மாகாணத்தில் ஜுபைல், நைரியா, கதீஃப், தம்மாம், தஹ்ரான், அல் கோபர், அப்காய்க் மற்றும் அல் அஹ்ஸா ஆகிய பகுதிகளிலும் மழை பெய்யும்.
கனமழை தவிர, காற்று, இடி, ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி, இந்தப் பகுதிகளில் உள்ள சாலைகளில் பார்வைத் திறன் கணிசமாகக் குறையும்.