உம்ரா யாத்ரீகர்களுக்காக மக்கா-மதீனா இடையே அதிவேக ரயில் சேவை..!

உம்ரா யாத்ரீகர்களுக்காக மக்கா-மதீனா இடையே அதிவேக ரயில் சேவை..!

புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா இடையே 2 மணி நேரம் 20 நிமிடங்களில் யாத்ரீகர்கள் பயணிக்க ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேக ரயில் சேவையை இயக்குவதற்கான நடவடிக்கை தயாராகி வருகிறது. 

அதிவேக ஹரமைன் எக்ஸ்பிரஸ் ரயில் நாட்டின் ஒருங்கிணைந்த போக்குவரத்து வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது மணிக்கு 300 கிமீ வேகத்தில் பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த ரயிலில் 400க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க முடியும். டிக்கெட்டுகளுக்கு 40 ரியால் முதல் 150 ரியால் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் ஜெட்டா மற்றும் கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டியில் நிறுத்தங்களை கொண்டிருக்கும்.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வழங்கிய அனுமதியின்படி, உலகம் முழுவதிலுமிருந்து வரும் முஸ்லிம்கள் விசிட் விசாவில் நாட்டில் தங்கியிருந்து உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

உம்ரா செய்ய சவூதி அரேபியாவிற்குச் செல்ல விரும்பும் யாத்ரீகர்கள் Maqam தளத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் - maqam.gds.haj.gov.sa/ - இதன்மூலம் அவர்கள் தேவையான அனைத்து பயண ஏற்பாடுகளையும் பேக்கேஜில் தேர்ந்தெடுக்கலாம்.