'மேட் இன் மக்கா' மற்றும் 'மேட் இன் மதீனா' அடையாளங்கள் தொடக்கம்..!

'மேட் இன் மக்கா' மற்றும் 'மேட் இன் மதீனா' அடையாளங்கள் தொடக்கம்..!

ஜித்தா:சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு புனித தலங்களுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் ‘மேட் இன் மெக்கா’ ‘மேட் இன் மதீனா’ என்ற வர்த்தக அடையாளத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் என சவுதி கைத்தொழில் மற்றும் கனிம வளங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்காவின் அமீர் மற்றும் இரண்டு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலரின் ஆலோசகர் இளவரசர் காலித் அல்-ஃபைசல் மற்றும் மதீனாவின் அமீரான இளவரசர் பைசல் பின் சல்மான் ஆகியோர் “மேட் இன் மக்கா” மற்றும் “மேட் இன் மதீனா” அடையாளங்களைத் தொடங்கி வைத்தனர்.

ஜித்தாவில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போ 2023 இல், மக்கா மற்றும் மதீனாவில் இந்த அடையாளங்களுடன் தயாரிக்கப்படும் பொருட்கள் உயர் தரத்தில் இருக்கும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். 

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இணைந்து மேட் இன் சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சவுதியின் 'விஷன் 2030' இன் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.