‘தவகல்னா’ அப்ளிகேஷனில் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ‘சாட்’ சேவை துவக்கம்!

‘தவகல்னா’ அப்ளிகேஷனில் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய  ‘சாட்’ சேவை துவக்கம்!

ரியாத்: சவுதி அரேபியாவின் பூர்வீக மற்றும் வெளிநாட்டினருக்கு பல்வேறு நோக்கங்களுக்காக உதவும் வகையில் சவுதி டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவால் வடிவமைக்கப்பட்ட தவகல்னா மொபைல் செயலியில் புதிய அரட்டை ‘Chat' சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரட்டை சேவை பயனாளிகள் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள உதவும்.

‘Chat' அரட்டை முறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். பயன்பாட்டின் புதிய பதிப்பான ‘தவக்கல்னா கித்மாத்’ (Tawakkalna Khidmaat) திறந்து, திரையின் மேற்புறத்தில் உள்ள பயனாளியின் புகைப்படத்தைக் கிளிக் செய்யவும். பிறகு தோன்றும் திரையில் கடைசியாக 'Contact Us' என்ற டேப்பில் கிளிக் செய்யவும். பின்னர் 'Direct Chat''நேரடி அரட்டை' என்பதைத் தேர்ந்தெடுத்து சாட்டை தொடங்கவும். புதிய சேவையின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், கேள்விகளுக்கு உண்மையான நேரத்தில் பதிலளிக்க முடியும். புதிய சேவையைப் பெற, தவகல்னா அப்ளிகேஷன்  பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பைப் புதுப்பிக்க வேண்டும்.