சவூதியில் உள்ள வெளிநாட்டு பள்ளிகள் சவுதியின் வரலாறு மற்றும் புவியியல் பாடத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்!
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டு (சர்வதேச) பள்ளிகளில் சவூதி அரேபியாவின் வரலாறு மற்றும் புவியியலை பாடத்திட்டத்தில் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
நாட்டில் தனியார் பள்ளிகளை நடத்துவதற்கான விதிகளுக்கு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு பாடத்திட்டங்களைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் அமைச்சகம் பரிந்துரைத்த சீர்திருத்தங்களுக்கு இணங்க வேண்டும் என்றும் மீறுபவர்களுக்கு ஐந்து லட்சம் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் பிற தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் வரலாறு மற்றும் புவியியலை பாடத்திட்டத்தில் சேர்க்க ஏற்கனவே விதிமுறை இருந்தாலும், இப்போது அதை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் கோருகிறது.