சவூதியில் ‘கஸ்டமர் கேர்’ வேலைகள் 100% உள்நாட்டவர்களுக்கு மட்டுமே!

சவூதியில் ‘கஸ்டமர் கேர்’ வேலைகள் 100%  உள்நாட்டவர்களுக்கு மட்டுமே!

ரியாத்: சவூதி அரேபியாவில் ‘கஸ்டமர் கேர்’ வேலைகள் முழுவதுமாக உள்நாட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது சவுதி மயமாக்கல் நடவடிக்கையின் ஒருபகுதியாகும்.

வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவைத் தொழில்களில் 100% சவுதி பிரஜைகள் பணியமர்த்தப்பட வேண்டும். இதுபோன்ற நிறுவனங்களில் சவுதி அரேபியர்களும் உயர் பதவிகளில் நியமிக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், சட்ட ஆலோசனை நிறுவனங்களில் 70 சதவீத சவுதிமயமாக்கல் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச சம்பளம் 5500 ரியால் வழங்கப்பட வேண்டும் என்றும் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.