ஜெத்தாவில் பரவலான சேதத்தை ஏற்படுத்திய கனமழை வெள்ளம்!

ஜெத்தாவில் பரவலான சேதத்தை ஏற்படுத்திய கனமழை வெள்ளம்!

ஜெத்தா: கனமழை மற்றும் வெள்ளத்தால் ஜெத்தாவில் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் முஹம்மது அல்கர்னி வெள்ள நீரோட்டத்தால் இரண்டு பேர் இறந்ததாக தெரிவித்தார்.

பலத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக குவிந்து கிடந்தன. நகரின் பல இடங்களில் மரங்கள் விழுந்து சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன, வாகனங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வருவதற்கு சிவில் பாதுகாப்புப் படையினர் ரப்பர் படகுகள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தினர். கனமழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜித்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.