அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் வாரத்தின் 7 நாட்களிலும் பாஸ்போர்ட் சேவைகளைப் பெறலாம்!

அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் வாரத்தின் 7 நாட்களிலும் பாஸ்போர்ட் சேவைகளைப் பெறலாம்!

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு விடுமுறை நாட்களிலும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது சம்பந்தமாக, ஆண்டுதோறும் ஒவ்வொரு நாளும் செயல்படும் மூன்று BLS மையங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அமைக்கப்பட்டுள்ளதாக துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. துபாயில் இரண்டு மையங்களிலும், ஷார்ஜாவில் ஒரு மையத்திலும் சேவைகள் கிடைக்கும்.

துபாய் அல் கலீஜ் மையம், பர்துபாய் ஹபீப் வங்கி, ஏஜி சூரிச் அல் ஜவாரா கட்டிடம் மற்றும் ஷார்ஜாவில் உள்ள எச்எஸ்பிசி மையம் ஆகியவற்றில் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் எனவும், இந்த வாரம் முதல் இந்த மையங்கள் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்தியர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் நடவடிக்கையாகும்.

அதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு விடுமுறை நாட்களிலும், ரமலான் மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளிலும்  திறக்கப்படாது. சந்திப்புக்கான விண்ணப்பம் https://blsindiavisa-uae.com/appointmentbls/appointment.php என்ற இணைப்பின் மூலம் செய்யப்பட வேண்டும். 

தட்கல் விண்ணப்பங்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் நேரடியாக ஆவணங்களுடன் வரலாம். உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெற 24 மணி நேர பிரவாசி பாரதி சகாயதா கேந்திராவை 80046342 என்ற எண்ணில் அழைக்கலாம். மின்னஞ்சல் முகவரிகள் passport.dubai@mea.gov.in மற்றும் visa.dubai@mea.gov.in.