துபாயில் அமையவிருக்கும் உலகின் முதல் 3டி பிரிண்டிங் கட்டுமான மஸ்ஜித்!
துபாய்: 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட உலகின் முதல் மசூதி துபாயில் நிறுவப்படவுள்ளது. மசூதியின் கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவடையும் என்று துபாய் மத விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
பர்-துபாய் பகுதியில் உலகின் முதல் மசூதி 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்படும். மசூதியின் கட்டுமானத்தில் ஒரு பெரிய அச்சுப்பொறியைப் பயன்படுத்தி முப்பரிமாண பொருட்களை அச்சிடும் மாதிரியில் கட்டிடம் கட்டும் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. 2000 சதுர அடி பரப்பளவில் உள்ள மசூதியில் பெண்கள் உட்பட 600 பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தலாம் என பொறியியல் துறைத் தலைவர் அலி அல் ஹல்யான் அல் சுவைதி தெரிவித்தார்.
3டி அச்சிடப்பட்ட மசூதிக்கு பர்துபாயில் அடையாளம் காணப்பட்ட சரியான இடம் பின்னர் அறிவிக்கப்படும். மஸ்ஜிதின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும். 2025ல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, தொழுகையாளிகளுக்கு மசூதி திறக்கப்படும் என்று துபாய் மத விவகாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுமானத் துறையில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் முக்கியமானது. பலர் முயற்சி செய்யத் தயங்கும் சூழ்நிலையில் மஸ்ஜிதையே இந்த மாதிரியில் கட்ட முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாதாரண கட்டிட கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் குறைவான கட்டுமான செலவு கொண்டதாது 3டி முறை.