யுஏஇ: தொழிலாளர்களுக்கு ஸ்பான்சர்கள் காப்பீடு வழங்க வேண்டும்!

யுஏஇ:  தொழிலாளர்களுக்கு ஸ்பான்சர்கள் காப்பீடு வழங்க வேண்டும்!

அபுதாபி: தொழிலாளர்களுக்கு 20,000 திர்ஹம் காப்பீடு வழங்க முதலாளிகள் கடமைப்பட்டுள்ளனர் என்று யுஏஇ தெரிவித்துள்ளது.  நிறுவனம் கடனில் சிக்கினால் அல்லது ஊழியர்களின் பலன்களை செலுத்தத் தவறினால் இந்நடவடிக்கையானது முன்னெச்சரிக்கையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மனித வள உள்நாட்டுமயமாக்கல் அமைச்சகத்திடம் 3000 திர்ஹம்ஸ் வங்கி உத்தரவாதத்தை வைத்திருப்பதற்கு பதிலாக, தொழிலாளர்கள் காப்பீடு பெறலாம் என்று அரசாங்கத்தின் போர்டல் தெளிவுபடுத்தியுள்ளது. காப்பீட்டு நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால், அதைத் திருப்பிச் செலுத்த முதலாளியும் பொறுப்பாவார். இல்லையெனில் நிறுவனத்தின் கோப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் மற்றும் புதிய பணி அனுமதி முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.