வாகன நம்பர் பிளேட்களை 48 மணிநேரத்தில் வீடுகளுக்கே சென்று வழங்கும் அபுதாபி காவல்துறை..!
அபுதாபி: நேரத்தை வீணடிக்காமல் உங்கள் வாகனத்துக்கான நம்பர் பிளேட்களை உங்கள் வீட்டிற்கு நேரடியாக தருவிக்க முடியுமா..? ஆம்.. அதற்கான வசதியை தற்போது அபுதாபி போலீசார் தயார் செய்துள்ளனர். தொடர்புடைய அதிகாரசபையின் இ-சேவை போர்ட்டல்கள் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால், எமிரேட்டின் எந்தப் பகுதிக்கும் நம்பர் பிளேட்களை டெலிவரி செய்யக்கூடிய புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
அதுவும் அதிக தாமதமின்றி, முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் நம்பர் பிளேட் நமக்கு டெலிவரி செய்யப்படும். ஆனால் முன்பதிவு செய்யும் போது சரியான டெலிவரி முகவரியை கொடுக்க வேண்டும். மேலும், முன்பதிவு செய்யும் போது டெலிவரி கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்.
டெலிவரி கட்டணம் செலுத்தப்பட்டதும், அதிகாரிகள் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு டெலிவரி செய்யும் நேரத்தையும் இடத்தையும் உறுதிப்படுத்துவார்கள். இலகுரக மற்றும் கனரக வாகனங்களின் அனைத்து நம்பர் பிளேட்டுகளுக்கும் டெலிவரி சேவை கிடைக்கும்.