திருவனந்தபுரத்திலிருந்து தம்மாம், பஹ்ரைனுக்கு சேவையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

திருவனந்தபுரத்திலிருந்து தம்மாம், பஹ்ரைனுக்கு சேவையை தொடங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மேலும் இரண்டு சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்குகிறது. திருவனந்தபுரம்-பஹ்ரைன் சேவை நவம்பர் 30 முதலும்,  திருவனந்தபுரம்-தம்மாம் சேவை டிசம்பர் 1, 2022 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்-பஹ்ரைன் சேவை (IX 573) புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 05.35 மணிக்குப் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு இரவு 08.05 மணிக்கு (உள்ளூர் நேரம்) பஹ்ரைன் வந்து சேரும். மறுமார்க்கம் (IX 574) பஹ்ரைனில் இருந்து இரவு 09.05 மணிக்கு (உள்ளூர் நேரம்) புறப்பட்டு அதிகாலை 04.25 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

திருவனந்தபுரம்-தம்மாம் விமானம் (IX 581) செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 05.35 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து  புறப்பட்டு இரவு 08.25 மணிக்கு (உள்ளூர் நேரம்) தம்மாம் வந்து சேரும். மறுமார்க்கம் (IX 582) தம்மாமிலிருந்து இரவு 09.25 மணிக்குப் புறப்பட்டு (உள்ளூர் நேரம்) காலை 05.05 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடையும்.

180 பேர் பயணிக்கும் வசதி கொண்ட போயிங் 737-800 விமானங்கள் சேவைக்கு பயன்படுத்தப்படும். இரண்டு சேவைகளுக்கும் முன்பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் - பஹ்ரைன் செக்டாரில் இயக்கப்படும் இரண்டாவது விமான சேவையாகும். Gulf Air இந்த வழித்தடத்தில் வாரம்  7 சேவைகளை இயக்குகிறது. திருவனந்தபுரம் - தம்மம் செக்டார்களில் இதுவே முதல் சேவையாகும்.