குவைத் பள்ளிகளில் மெட்டல் வாட்டர் பாட்டில்களுக்கு தடை!
குவைத் சிட்டி: குவைத் பள்ளிகளில் மெட்டல் வாட்டர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை அந்நாட்டு கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி மாணவர் ஒருவர் தனது மெட்டல் வாட்டர் பாட்டிலால் வகுப்புத் தோழியை துன்புறுத்திக் கொண்டிருந்தார். இதனால் படுகாயமடைந்த மாணவியை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குவைத் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சில பள்ளிகளில் சிறுவர்களுக்கு மட்டும் மெட்டல் வாட்டர் பாட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சிறுவர், சிறுமியர் என அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என கூறப்படுகிறது.