பிக் டிக்கெட் வீக்லி டிராவில் ஒரு கிலோ தங்கம் வென்ற இந்தியர்!

பிக் டிக்கெட் வீக்லி டிராவில் ஒரு கிலோ தங்கம் வென்ற இந்தியர்!

அபுதாபி: அபுதாபி பிக் டிக்கெட் நடத்தும் வாராந்திர குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு கிலோ 24 காரட் தங்கத்தை வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த மாதம் (அக்டோபர்) நடைபெற்ற இறுதி வாராந்திர டிராவில் இந்தியாவின் வினய் குமார் காந்தி தங்கப் பரிசை வென்றார். 42 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வரும் வினய் குமார், தற்போது அபுதாபியில் கணக்கு மேலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.