சவுதியின் புதிய பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்
சவூதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் தனது மகனும், பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானை நாட்டின் புதிய பிரதமராக நியமித்துள்ளார். சல்மான் இதற்கு முன்பு துணைப் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அவருக்குப் பதிலாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவரது இளைய சகோதரர் காலித் பின் சல்மான் துணை ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.