சவுதியில் விசிட்டிங் விசா காலம் மூன்று மாதங்களாக குறைப்பு!
ரியாத்: சவூதி அரேபிய அமைச்சரவையானது, எந்த நோக்கத்திற்காகவும் வருகைதரும் சிங்கிள் எண்ட்ரி விசாக்களின் செல்லுபடியை மூன்று மாதங்களாக குறைத்துள்ளது. விசிடிங் தேவையுடன் கூடிய போக்குவரத்து விசாவும் மூன்று மாதங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டிராவல் விசாவில் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் காலம் 96 மணிநேரமாக்கப்பட்டுள்ளது. டிராவல் விசாவிற்கு கட்டணம் இல்லை.
சவுதி ஆட்சியாளர் சல்மான் தலைமையில் ரியாத் அல் யமாமா அரண்மனையில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டம், விசிட் விசா காலம் மற்றும் டிராவல் விசா கட்டமைப்பில் திருத்தங்களைச் செய்தது.