யு.ஏ.இ. தனியார் நிறுவனங்களில் 2% எமராத்திகளை நியமிக்கும் காலக்கெடு டிச.31

யு.ஏ.இ. தனியார் நிறுவனங்களில் 2% எமராத்திகளை நியமிக்கும் காலக்கெடு டிச.31

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனியார் நிறுவனங்களில் 2% எமராத்திகளை நியமிக்கும் சுதேசிமயமாக்கலை அமல்படுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

அபராதம்

சட்டத்திற்கு இணங்காத மற்றும் தவறான போலியான தகவல்களை வழங்கும் நிறுவனங்களுக்கு  20,000 திர்ஹம் (ரூ. 4.42 லட்சம்) முதல் 1 லட்சம் திர்ஹம் (ரூ. 22.1 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும் என்று மனிதவள உள்நாட்டுமயமாக்கல் அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.

50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தனியார் துறை நிறுவனங்களில் திறமையான பணியிடங்களில் 2% எமராத்திகள் ஆண்டுதோறும் நியமிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். 2026ஆம் ஆண்டுக்குள் சுதேசிமயமாக்கல் விகிதம் 10% ஆக உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. இதன்படி ஓராண்டில் 12,000 பூர்வீக குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்வீக குடிமக்களிடையே வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்கும் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 2% உள்நாட்டு எமரார்த்திகளை வைத்திருக்க வேண்டும். ஜனவரி 1, 2023 முதல், சுதேசி சட்டத்திற்கு இணங்காத நிறுவனங்களுக்கு ஒரு நபருக்கு  6,000 திர்ஹாம்கள் என்ற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும்.

நிறுவனங்களுக்கு பெரும் லாபம்

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு பெரும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று முறை உள்நாட்டு மயமாக்கலை  அமல்படுத்தும் நிறுவனங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பணி அனுமதி தற்போது 3750 திர்ஹமிலிர்ந்து  250 திர்ஹமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 2% சுதேசிமயமாக்கலுக்கு இணங்கிய நிறுவனங்களுக்கு உள்நாட்டு மற்றும் GCC நாட்டினரை பணியமர்த்தும்போது பணி அனுமதி அல்லது பணம் தேவையில்லை.