அபுதாபி பிக் டிக்கெட்டின் வீக்லி இ-டிராவில் ஒரு கிலோ தங்கம் வென்ற இந்திய ஒட்டுநர்!

அபுதாபி பிக் டிக்கெட்டின் வீக்லி இ-டிராவில் ஒரு கிலோ தங்கம் வென்ற இந்திய ஒட்டுநர்!

அபுதாபி: பிக் டிக்கெட்டின் டிசம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாவது வாராந்திர குலுக்கல்லில், தங்கப் பரிசை அபுதாபியில் உள்ள இந்திய ஒட்டுநர் ராஜு பெத்திராஜு வென்றார்.

ராஜு 2018 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து தற்போது டிரைவராக பணியாற்றி வருகிறார். தனது ஒன்பது சகாக்களுடன் சேர்ந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிக் டிக்கெட்டை எடுத்து வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் ஏழு டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுத்துள்ளனர். ஏதாவது ஒரு காரியத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இந்த குழுவினர் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து வருகின்றனர். பல வருட காத்திருப்புக்குப் பிறகு, டிசம்பர் 16 அன்று ராஜுவுக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு ஒரு கிலோ தங்கத்திற்கான அறிவிப்பை தெரிவித்தது. 

தங்கப்பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று போன் செய்த பிக் டிக்கெட் பிரதிநிதியிடம் ராஜு மிகவும் மகிழ்ச்சியுடன் பதிலளித்தார். அவர் பணத்தை சொந்த ஊருக்கு ஒரு சிறு வணிக முயற்சியில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.