துபாய்-கரிபூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு! - விமானம் ரத்து

துபாய்-கரிபூர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு! - விமானம் ரத்து

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் இருந்து கரிபூருக்கு செல்லும் விமானத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.20 மணியளவில், பயணிகள் விமானத்தில் ஏறும் போது பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்திற்குள் பாம்பு இருப்பதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுதிக்கு மாற்றப்பட்டனர். ஆனால் விசிட் விசாவில் துபாய் வந்தவர்கள் இன்னும் விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.

தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அந்த சேவை ரத்து செய்யப்பட்டது. சம்பவத்திற்குப் பிறகு விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பயணிகளை வேறு விமானத்திற்கு மாற்றவும், அவர்களை  கரிபூருக்கு அழைத்துச் செல்லவும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

விமானம் எப்போது புறப்படும் என்பது குறித்து அதிகாரிகள் தெளிவான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பாம்பு எப்படி விமானத்தில் வந்தது என்பது தெரியவில்லை. பாம்பை பிடிக்க முடியாமல் விமானம் காலவரையின்றி தாமதமானதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.