கத்தார் வாழ் இந்தியர்கள் இன்று இந்திய தூதரை நேரில் சந்தித்து குறைகளை முறையிடலாம்! - இந்திய தூதரகம் அறிவிப்பு

தூதரகத் தலையீடு தேவைப்படும் எந்தவொரு விஷயமும், ஓபன் ஹவுஸ் மூலம் தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படலாம். தூதுவர் தவிர, தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் ஓபன் ஹவுஸில் கலந்து கொள்வார்கள்.

கத்தார் வாழ் இந்தியர்கள் இன்று இந்திய தூதரை நேரில் சந்தித்து குறைகளை முறையிடலாம்! - இந்திய தூதரகம் அறிவிப்பு

தோஹா: கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள ‘ஓபன் ஹவுஸ்’ நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு தோஹாவில் உள்ள தூதரகத்தில் கத்தார் நேரப்படி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான தூதர்  தீபக் மிட்டலிடம் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

விவகாரங்கள் அல்லது புகார்கள் உட்பட உடனடி தூதரகத் தலையீடு தேவைப்படும் எந்தவொரு விஷயமும், ஓபன் ஹவுஸ் மூலம் தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்படலாம். தூதுவர் தவிர, தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் ஓபன் ஹவுஸில் கலந்து கொள்வார்கள். 

ஐந்து மணிக்குப் பிறகு இரவு ஏழு மணி வரை,  WebX மூலம் ஆன்லைனில் பங்கேற்கலாம்.  (Meeting Id 2367 196 1195 Password 112200 மின்னஞ்சல் முகவரி labour.doha@mea.gov.in) இது தவிர +974 55097295 என்ற தொலைபேசி எண்ணில் நேரடியாக தொடர்பு கொண்டு ஒபன் ஹவுஸில் பங்கேற்கலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.