அபுதாபி Big Ticket-ன் weekly e-draw-வில் ஒரு கிலோ தங்கம் வென்ற தமிழர்!
அபுதாபில் நடைபெற்று வரும் பிக் டிக்கெட்டில் (Big Ticket draw) மாதாந்திர டிராவுடன் சேர்த்து சமீப காலமாக வாராந்திர டிராவும் (weekly e-draw) நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான இரண்டாவது வாராந்திர டிராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் திருநாவுக்கரசு என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை அடுத்து அவருக்கு 1 கிலோ (24 காரட்) தங்கம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
18 பேர் கொண்ட குழுவுடன் பிக் டிக்கெட்டின் "இரண்டு டிக்கெட் வாங்கினால் ஒன்று இலவசம்" என்ற சலுகையைப் பயன்படுத்தி அக்டோபர் 16-ஆம் தேதி வாராந்திர டிரா தேதிக்கு ஒரு நாள் முன்னதாகதான் இந்த டிக்கெட்டை அவர் வாங்கியதாக தெரிவித்துள்ளார். அந்த டிக்கெட்டானது அவருக்கு தங்கத்தை அள்ளிச்செல்ல வித்திட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அபுதாபியில் வசிக்கும் சாஃப்ட்வேர் இஞ்சினீயரான இவர், 2019 முதல் பிக் டிக்கெட் ரேஃபிள் டிக்கெட்டுகளை வாங்குவதாக தெரிவித்துள்ளார். ஜெயக்குமாரைப் போலவே, அக்டோபர் மாதத்தில் பிக் டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தானாகவே வாராந்திர மின்னணு டிராவில் நுழைவார்கள், அதில் ஒரு வெற்றியாளர் ஒவ்வொரு வாரமும் 1 கிலோ தங்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் நவம்பர் 3 அன்று நடக்கவிருக்கும் மாதாந்திர டிராவில் வெற்றியாளருக்கு 25 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற மாபெரும் பரிசை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
இதற்கான டிக்கெட்டுகளைப் பெற அக்டோபர் 31 வரை ஆன்லைனிலோ ( https://bigticket.ae/ ) அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.