அபுதாபி 'பிக் டிக்கெட்' - 66 கோடிகளை வென்ற தமிழர்..!

அபுதாபி: அபுதாபி பிக் டிக்கெட்டின் 246வது தொடரின் நேரடி டிராவில் வெளிநாடு வாழ் இந்தியர் கேரளாவை சேர்ந்த காதர் ஹுசைன் மூன்று கோடி திர்ஹாம் (66 கோடி இந்திய ரூபாய்க்கு மேல்) பெரும் பரிசை வென்றார்.
இரண்டாவது பரிசான திர்ஹம் 1,000,000-யை (22 கோடி ரூபாய்) இந்தியாவை சேர்ந்த தாமஸ் ஒல்லுகாரன் என்பவரும், மூன்றாவது பரிசான 100,000 திர்ஹமை (22 லட்சம் ரூபாய்) இந்தியாவைச் சேர்ந்த பிரப்ஜீத் சிங் வென்றார். நான்காவது பரிசான 50,000 திர்ஹம்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சயீத் காமிஸ் ஹமத் சயீத் அல்ஜென்பெல் வென்றார்.
மேலும் பிக் டிக்கெட் டிரீம் கார் டிராவின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த நிஷா முஹம்மது பிஹாஸ் ரேஞ்ச் ரோவர் சீரிஸ் 7 காரை வென்றார்.