சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர். சுஹைல் அஜாஸ் கான் நியமனம்!

சவூதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர். சுஹைல் அஜாஸ் கான் நியமனம்!

ரியாத்: சவுதி அரேபியாவுக்கான புதிய இந்திய தூதராக டாக்டர். சுஹைல் அஜாஸ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 1997 பேட்ச் ஐஎஃப்எஸ் அதிகாரியான  டாக்டர். சுஹைல் அஜாஸ் கான் சவுதி அரேபியாவுக்கான தூதராக இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் வியாழன் அன்று நியமிக்கப்பட்டார். தற்போது லெபனானுக்கான தூதராக உள்ள அவர், விரைவில் ரியாத் வந்து பொறுப்பேற்க உள்ளார்.

முன்னதாக புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர். சுஹைல் அஜாஸ் கான் சவுதியில் தூதரகப் பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும். அவர் ஜித்தாவில் கான்சல் ஜெனரலாகவும், ரியாத்தில் துணைத் தூதராகவும் பணியாற்றினார். செப்டம்பர் 2017 முதல் ஜூன் 2019 வரை, அவர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் DCM ஆக பணியாற்றினார். ஜூன் 21, 2019 அன்று லெபனான் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். இந்தூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற அவர், 1997ல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார்.

டாக்டர். சுஹைல் அஜாஸ் கானின் வெளிநாட்டு இராஜதந்திர பணி 1999 இல் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொடங்கியது. 2001 வரை அங்கேயே இருந்தார்.  அவர் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அரபு மொழியில் டிப்ளமோ பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.