யுஏஇ: வீட்டுப் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை..! - மீறினால் அபராதம்! - புதிய சட்ட விதி அமல்

யுஏஇ: வீட்டுப் பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறை..! - மீறினால் அபராதம்! - புதிய சட்ட விதி அமல்

அபுதாபி: ஐக்கிய அரசு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அந்த நாட்டில் பணிபுரியும் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வீட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான 2022 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண்.9 ஐ வெளியிட்டுள்ளது.  இது உள்நாட்டு தொழிலாளர் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்றும் இதில் தொழிலாளர்கள், முதலாளிகள் அல்லது ஆட்சேர்ப்பு ஏஜென்ட் என அனைத்து தரப்பினரின் உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த புதிய விதிமுறைகளானது வீட்டுத் தொழிலாளர்களுக்கு வேலை நேரம், வாராந்திர இடைவேளை மற்றும் விடுப்பு ஆகியவற்றையும், சட்டத்தின் நிர்வாக விதிமுறைகளின்படி, வீட்டுத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கான உரிமையையும் உறுதிப்படுத்துகிறது.

மேலும், இது வீட்டுத் தொழிலாளர் சட்டத்தை மீறுவதற்கான அபராதங்களை விளக்குகிறது. அதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக வீட்டு வேலைக்கு அமர்த்தும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 50,000 முதல் 200,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டுப் பணியாளர்களுக்காக வழங்கப்பட்ட பணி அனுமதியினை (work permit) தவறாகப் பயன்படுத்தியதற்காக அல்லது 18 வயதுக்குட்பட்ட ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்துவதற்காகவும் இந்த அபராதத்தை எதிர்கொள்ளலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘வீட்டுத் தொழிலாளருக்கு வேலை அனுமதி (work permit) பெறாமல் வேலைவாய்ப்பை வழங்குவது, ஒரு வீட்டுத் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பை (employment) வழங்காமல் அவரை வேலைக்கு அமர்த்துவது, வீட்டுப் பணியாளர்களுக்கான வேலை அனுமதியினை அவை வழங்கப்பட்ட நோக்கத்திற்கு அல்லாத பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவது, வீட்டுத் தொழிலாளர்களின் சம்பள நிலுவைத் தொகையைத் தீர்க்காமல் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை மூடுவது அல்லது நிறுத்துவது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணியமர்த்துவது, ஒரு வீட்டுத் தொழிலாளரை வேலையிலிருந்து நீங்குவதற்கு உதவுவது அல்லது சட்டவிரோதமான முறையில் வேலைக்கு அமர்த்துவதற்காக அவர்களுக்கு தங்குமிடம் அல்லது வீடுகளை வழங்குவது’ போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 50,000 திர்ஹம்ஸ் முதல் 200,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.