துபாயில் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் புதிய ஸ்மார்ட் இயந்திரம்...!

துபாயில் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் புதிய ஸ்மார்ட் இயந்திரம்...!

‘Bread for All’ என்ற பெயரில்  அமீரகத்தில் இருக்கும் ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களின் பசியைப் போக்குவதற்காக புதிய திட்டம் ஒன்று துபாயில் துவங்கப்பட்டுள்ளது . 

அமீரகத்தில் உள்ள முகம்மது பின் ரஷீத் குளோபல் சென்டர் ஃபார் எண்டோமெண்ட் கன்சல்டன்ஸியானது (MBRGCEC ), ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நாளின் பல்வேறு நேரங்களில் அவர்களின் பசியைப் போக்குவதற்காக இலவசமாக பிரட் வழங்குவதனை நோக்கமாக கொண்டு அனைவருக்கும் ப்ரட் (Bread for All) திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது . இந்த டிஜிட்டல் முன்முயற்சியானது பல விற்பனை நிலையங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் இயந்திரங்கள் மூலம் தேவைப்படுபவர்களுக்கு ஃப்ரஷ்ஷான புதிய ப்ரட்டினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் இதில் இருக்கும் முன் - திட்டமிடப்பட்ட (Pre-programmed) இயந்திரங்கள் தொண்டுப் பணியின் ஒரு பகுதியாக ப்ரட்டினை தயாரித்து இலவசமாக வழங்குகின்றன என கூறப்பட்டுள்ளது .

கொரோனா காலத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் “ஐக்கிய அரபு அமீரகத்தில் பசியுடன் யாரும் தூங்குவதில்லை” என்று வலியுறுத்தியதன் நோக்கத்தை இந்த திட்டம் உணர்த்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த திட்டத்தின் ஸ்மார்ட் மெஷின்கள் அல் மிசார், ஆல் வர்கா, மிர்திஃப், நாத் அல்ஷேபா, நாத் அல் ஹமர், அல்கூஸ் மற்றும் அல்பதா ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இயந்திரங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவையாகவும் , பயனாளிகளுக்காக எளிதான செயல்பாடுகளையும் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு தேவைப்படும் எந்தவொரு நபரும் இந்த இயந்திரத்தில் ‘ஆர்டர்’ பட்டனை அழுத்தினால் சிறிது நேர காத்திருப்புக்குப் பிறகு , ப்ரட் தயார் செய்யப்பட்டு, அது இயந்திரத்திலிருந்து விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.