ரியாத்தில் நடைபெறும் உலகளாவிய சுகாதார கண்காட்சி

ரியாத்தில் நடைபெறும் உலகளாவிய சுகாதார கண்காட்சி

ரியாத்: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஞாயிற்றுக்கிழமை உலக சுகாதார கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 27 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 112 க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர் என்று சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ஃபஹத் அல்-ஜலாஜிலின் தலைமையின் கீழ் நடைபெறும் மூன்று நாள் கண்காட்சி ரியாத் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில், “சுகாதாரத் துறையில் மாற்றம்” என்ற முழக்கத்துடன் நடைபெறும்.

சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களுக்கான மிகப்பெரிய மன்றமாக இருக்கும் இந்த நிகழ்வில், 10,000 க்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வின் ஒரு அங்கமாக பொது சுகாதாரம் தொடர்பாக நான்கு தொடர்ச்சியான மருத்துவக் கல்வி மாநாடுகள் உட்பட ஐந்து மாநாட்டு நிகழ்வுகளும் கண்காட்சியில் அடங்கும்.

இந்த ஆண்டு நிகழ்வில் தலைவர்கள் கூட்டமும் அடங்கும். இது சவுதியின் தொலைநோக்கு திட்டமான 2030 ஐ அடைவது, சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் மருந்துகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் நிர்வாகத்திற்கான அணுகலை ஊக்குவித்தல் ஆகியவற்றில் தலைவர்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான உரையாடலை செயல்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.