ஓமனில் வீட்டில் உணவு தயாரித்து விற்பனை செய்தவர்கள் ரெய்டில் சிக்கினர்..!

ஓமனில் வீட்டில் உணவு தயாரித்து விற்பனை செய்தவர்கள் ரெய்டில் சிக்கினர்..!

மஸ்கட்: ஓமனில் வீட்டில் உணவு சமைத்து விற்பனை செய்தவர்கள் ரெய்டில் சிக்கினர். மஸ்கட் முனிசிபாலிட்டியைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர் பவுஷரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக கிடைத்த தகவலின்படி, ராயல் ஓமன் காவல்துறையினரின் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மஸ்கட் முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வீட்டிற்குள் உணவு மற்றும் தயாரிப்புப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு, அதிக அளவு உணவுகள் சமைத்து நுகர்வோருக்கு வணிக அடிப்படையில் விற்கப்பட்டன. இந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 220 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுதொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளதாக நகராட்சி தெரிவித்துள்ளது.