குவைத்தில் காவல் நிலையம் மீது தாக்குதல்! குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்!
குவைத் சிட்டி: குவைத்தில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய 7 மர்மநபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். போலிஸ் நிலையத்திற்குச் சென்ற நபரையும் குற்றவாளிகள் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுலைபியா போலிஸ் நிலையத்தை தாக்கிய சந்தேக நபர்கள், போலிஸார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய போது நிலையத்திற்கு வந்த நபரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நபர் ஒருவர் போலிஸ் நிலையத்திற்கு புகார் செய்ய சென்றதை அடுத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்போது ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து புகார்தாரரை குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து காப்பாற்ற முயன்ற போது ஒரு போலீஸ்காரர் கையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர் போலீசார் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குற்றவாளி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர்கள் வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.