கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த உலகின் மிகச்சிறிய மனிதர்!
உலகின் மிகச் சிறிய குட்டையான மனிதர் என்ற கின்னஸ் சாதனையை, 65.24 செமீ உயரம் கொண்ட துபாயில் வசிக்கும் ஈரானை சேர்ந்த அஃப்ஷின் இஸ்மாயில் கதர்சாதே பெற்றுள்ளார்.
ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள புகான் கவுண்டியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் பிறந்த 21 வயது அஃப்ஷின் இஸ்மாயிலின் வாழ்க்கை மிகவும் கடினமானது.
அஃப்ஷினின் தந்தை இஸ்மாயில் கூறுகையில், தன்னை எப்போதும் கவனித்துக் கொள்ள ஒருவர் தேவைப்படுவதால் அஃப்ஷின் இஸ்மாயிலால் பள்ளிக்கு கூட செல்ல முடியவில்லை. இன்று, அஃப்ஷின் தனது சொந்த ஊரில் ஒரு நட்சத்திரம். அவர் எங்கு சென்றாலும் நண்பர்களை உருவாக்குகிறார். தன்னிடம் பேசவும் செல்ஃபி எடுக்கவும் மக்கள் வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவன் உணர்கிறான் என்றார்.