துபாய் மக்கள் தொகை 35 லட்சத்தை தாண்டியது...!

துபாய் மக்கள் தொகை 35 லட்சத்தை தாண்டியது...!

துபாயின் மக்கள் தொகை 35 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 2.1% அதிகரித்துள்ளதாக புள்ளியியல் மைய அறிக்கை தெரிவிக்கிறது. புதிய மதிப்பீட்டின்படி, மக்கள் தொகை 35,50,400. மக்கள்தொகையில் துபாயில் பணிபுரிபவர்களும் அடங்குவர். 

மக்கள்தொகை வளர்ச்சியானது பொருளாதார மீட்சிக்கான அறிகுறி என்றும் புள்ளி விவர அறிக்கை கூறியுள்ளது. துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP) கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 4.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.