இனி..! GCC நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் கத்தாரில் டிரைவிங் கோர்ஸ் அவசியம் இல்லை..!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் கத்தாரில் ஓட்டுநர் உரிம சோதனைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் டிரைவிங் கோர்ஸ் படிக்க வேண்டிய அவசியம் இல்லை...

இனி..!  GCC நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ் இருந்தால் கத்தாரில் டிரைவிங் கோர்ஸ் அவசியம் இல்லை..!

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் கத்தாரில் ஓட்டுநர் உரிம சோதனைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் டிரைவிங் கோர்ஸ் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

தற்போது, கத்தாரில் டிரைவிங் லைசென்ஸ் பெற, டிரைவிங் படிப்பில் சேர வேண்டும். இருப்பினும் , ஏதேனும் GCC நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால், அவர் இந்தப் படிப்பில் சேர தேவையில்லை. 

இதுகுறித்து கத்தாரின் முதல் லெப்டினன்ட் பொது போக்குவரத்து இயக்குனர் முகமது அல் அம்ரி கத்தார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதை விளக்கினார். 
GCC உரிமம் வைத்திருப்பவர்கள் கத்தாருக்குச் சென்றால் மூன்று மாதங்கள் வரை கத்தாரில் வாகனம் ஓட்டலாம். ஆனால் அதிகாரிகள் சோதனையின்போது, அவர்கள் கத்தாருக்குள் நுழைந்த நேரத்தைக் குறிப்பிடும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, பாஸ்போர்ட் அல்லது நுழைவு விசா ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும் .