ஷார்ஜாவில் மூடப்படும் ‘கச்சா’ பார்க்கிங்!

ஷார்ஜாவில் மூடப்படும் ‘கச்சா’ பார்க்கிங்!

ஷார்ஜாவில் உள்ள பல இடங்களில் பெய்ட் பார்க்கிங் இருந்தாலும், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒதுக்கப்பட்ட காலி ‘கச்சா’ இடங்களில் இலவசமாக வாகன பார்க்கிங் செய்ய முடிந்தது. இந்நிலையில் இந்த இடங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. நகரை அழகுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பல ஆண்டுகளாக பொது பார்கிங் பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் வேளையில், கச்சா பார்க்கிங் இடங்களும் மூடப்பட்டு வருகின்றன.

தற்போது 57,000 பொது பார்க்கிங்குகள் ஷார்ஜாவில் உள்ளன. அக்டோபர் மாதம் 2440 புதிய பார்க்கிங் திறக்கப்பட்டது. இலவச பார்கிங் அடைக்கப்படுவதால், தனியார் பார்கிங் ஆபரேட்டர்களுக்கும் கட்டணம் அதிகரிக்கிறது. ஒரு மாதத்திற்கு என்ற கட்டணத்தில் வாடகைக்கு தருபவர்களின் விலை அதிகரிக்கிறது.