துபாயில் உலகின் முதல் சர்வதேச டிஜிட்டல் பொருளாதார நீதிமன்றம் தொடக்கம்!
துபாய்: டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்ச்சை தீர்வுக்கான உலகின் முதல் சர்வதேச டிஜிட்டல் பொருளாதார நீதிமன்றம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கப்பட்டுள்ளது.
துபாய், சர்வதேச நிதி மையத்தை தலைமையிடமாகக் கொண்டது. சர்வதேச சட்ட வல்லுநர்கள் நீதிமன்றத்தை வழிநடத்துவார்கள். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட மேம்பட்ட அமைப்புகள் மூலம் தகவல்களை நிர்வகிக்க, குறிப்பிட்ட விதிகளை உருவாக்கவும் ஸ்மார்ட் படிவங்களை உருவாக்கவும் உலகத் தரம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பெரிய (Data) தரவு, பிளாக்செயின், AI, fintech மற்றும் க்ளவுட் சேவைகள் முதல் ட்ரோன்கள் வரையிலான சிக்கலான சிக்கல்களை சிறப்பு நீதிமன்றம் கையாளும்.