சவுதி : மருத்துவ பரிசோதனை அறைகள், பியூட்டி பார்லர்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களுக்கு தடை...!

சவுதி : மருத்துவ பரிசோதனை அறைகள், பியூட்டி பார்லர்கள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களுக்கு தடை...!

சவூதி அரேபியாவில் மருத்துவ பரிசோதனைக்கான வசதிகள் மற்றும் அறைகள், உள்நோயாளிகள் அறைகள், பிசியோதெரபி வசதிகள், உடைகள் மாற்றும் அறைகள், கழிப்பறைகள், சலூன்கள் மற்றும் பெண்கள் கிளப்களில் பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய சட்டத்தின் விதிகள் நிதி நிறுவனங்கள், வங்கிகள், பணப்பரிவர்த்தனை மையங்கள் தவிர மற்ற இடங்களுக்கு பொருந்தும் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.