காரில் சவூதி எல்லையை கடக்க இது அவசியம் !!

சவூதியிலிருந்து இனி வெளிநாடுகளுக்கு செல்ல கீழுள்ள தகவல் அவசியமாகும் சவூதியில்தற்காலிக ஓட்டுநர் உரிமம் கொண்ட வெளிநாட்டினர் தனது வாகனங்களுடன் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்று சவுதி போக்குவரத்து இயக்குநரகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் தற்காலிக ஓட்டுநர் உரிமமானது முழு ஓட்டுநர் உரிமமாக கருதப்படுவதில்லை. எனவே தற்காலிக ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் சவுதி அரேபியாவில் மட்டுமே வாகனம் ஓட்ட முடியும். மேலும் 17 வயதை பூர்த்தி செய்து தற்காலிக ஓட்டுநர் உரிமம் பெற்ற வெளிநாட்டவர் சவுதியில் பதிவு செய்யப்பட்ட காருடன் வெளிநாடு செல்ல முடியுமா என பயனாளர் ஒருவர் கேட்டதற்கு போக்குவரத்து இயக்குனரகம் அவ்வாறு செல்ல இயலாது என தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் ஓட்டுநர் உரிமம் பெற 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.ஆனால் 17 வயது நிறைவடைந்தவர்களுக்கு ஓராண்டு செல்லுபடியாகும் தற்காலிக ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படுகிறது. மேலும் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன உரிமையாளரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால், உரிமம் உள்ள ஒருவரை உண்மையான பயனராக பதிவு செய்வது கட்டாயம் என்றும் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

காரில் சவூதி எல்லையை கடக்க இது அவசியம் !!