அபுதாபியில் முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினருக்கு 5 மொழிகளில் திருமண சேவைகள்!
அபுதாபி: அபுதாபி நீதித்துறை (ADJD) வெளிநாட்டு முஸ்லிம் அல்லாதவர்களுக்காக 5 மொழிகளில் சிவில் திருமண சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவை அரபு, ஆங்கிலம், ரஷ்யன், சீனம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் கிடைக்கிறது. மேலும் பல மொழிகள் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என்றும் அபுதாபி நீதித்துறை அறிவித்துள்ளது.
View this post on Instagram
சிவில் திருமண சட்டம்
அபுதாபி அரசாங்கம் வெளிநாட்டினருக்கான தனிப்பட்ட அந்தஸ்து தொடர்பான 2021 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சிவில் திருமணங்களை அனுமதிக்கிறது. ஒரு சிவில் திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சட்டப்பூர்வ ஒப்பந்தமாகும். இது ஒரு சிவில் ஒப்பந்தம் மற்றும் மதச்சார்பற்ற விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இது 2021 ஆம் ஆண்டின் 14 ஆம் எண் சட்டத்தின் 4 மற்றும் 5 வது பிரிவுகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சட்டமானது கலப்பு ஜோடிகளுக்கு இடையே திருமணத்தையும் அனுமதிக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பாளர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் புதிய சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.
தேவைகள்
ஒரு சிவில் திருமணத்திற்கான முக்கிய சட்டத் தேவைகள் இரண்டு நபர்களும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் சுதந்திரமாக சம்மதிக்க வேண்டும். முன்னதாக தாங்கள் திருமணமாகாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் பிரகடனத்திலும் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.