சவுதிக்கு விசிட் விசாவில் வருபவர்கள் இனி வாகனங்களை வாடகைக்கு எடுக்கலாம்!

சவுதிக்கு விசிட் விசாவில் வருபவர்கள் இனி வாகனங்களை வாடகைக்கு எடுக்கலாம்!

ரியாத்: சவுதி அரேபியாவிற்கு விசிட்டர் விசாவில் வரும் வெளிநாட்டினர் வாகனம் ஓட்டுவதற்கு தற்காலிகமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் சமூக விவகார அமைச்சகத்தின் அப்ஷிர் போர்ட்டலில் இதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 தற்போது சவுதி அரேபியாவில் குடியிருப்பு விசா உள்ளவர்கள் மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். புதிய முடிவின்படி, ரெண்ட்-ஏ-கார் நிறுவனங்கள் அப்ஷிர் மூலம் பதிவு செய்து, விசிட் விசா வைத்திருப்பவர்களை ஓட்ட அனுமதிக்கலாம்.