சவூதி அரேபியா : ஹயா கார்டுதாரர்களுக்கு இ-விசா சேவை துவக்கம்!
ரியாத்: சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், கத்தார் FIFA உலகக் கோப்பை 2022க்கான ஹயா ஃபேன் கார்டு வைத்திருப்பவர்கள் சவுதிக்குள் நுழைவதற்கான விசாவைப் பெற உதவும் மின்னணுச் சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் ஒருங்கிணைந்த விசா பிளாட்ஃபார்ம் மூலம் விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம். https://visa.mofa.gov.sa என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் விசா விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹயாவை வைத்திருப்பவர்களுக்கு சவுதி அரேபியாவிற்கு நுழைவு விசா வழங்குவதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் இ-விசா சேவை தளம் தொடர்பான இ-சேவைகளின் செலவுகளை அரசே ஏற்கும் என்று அமைச்சர்கள் கவுன்சில் செவ்வாயன்று ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஹயா அட்டை என்பது FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் மற்றும் தேவைப்படும் தனிப்பட்ட ஆவணமாகும்.