பித்தப்பை கல் நீங்க எளிய  மருத்துவ முறைகள

பித்தப்பை கல் நீங்க எளிய  மருத்துவ முறைகள

பித்தக்கற்கள் அல்லது பித்தபை கற்கல் என்பது என்ன?

பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகின்றது. இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொலஸ்ட்ரால் அல்லது பித்த உப்புக்களால் உருவாகும். இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவிலான டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும். என்று பல்வேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பித்தப்பை ஒரு சிறு உறுப்பு தான் இது மனிதனின் ஈரலுக்கு கீழ் பச்சை நிறத்தில் அமைந்து இருக்கும். இதனுடைய செயல் பாடுகள் என்னவென்றல்,  உணவு செரிமானத்தில் இந்த பித்தப்பையின் பங்கு முக்கியமானது. மேலும்  இது மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்து கொள்ளும் ஒரு தனி அறை. அன்றாடம் நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கிறது. இந்த அமிலம் பலவகையான  பொருட்களால் ஆனது.எத்தகைய உணவையும் செரித்துவிடும் தன்மை இந்த அமிலத்திற்கு உண்டு என்பதுக்கு இதன் சிறப்பு.

அறிகுறிகள்:


கொழுப்பு அதிகம் உள்ள உணவு உண்பதால் பித்தப்பையில் கல் உருவாகிறது.
இதன் அறிகுறி வலது நெஞ்சில் வலி, நேர் பின்முதுகில் வலி அல்லது பிடித்திருப்பது போன்ற ஒரு உணர்வு , வலது தோளிலிருந்து உள்ளங்கை வரை வலி மற்றும் வயிற்றில் மேல் பகுதியில் வலது புறத்தில் வலி கடுமையாக ஏற்படும்.இந்த நோய் உள்ளவர்களுக்கு குமட்டல் உண்டாகும்.வாந்தி உண்டாகும். உணவு பாதையில் பிரச்னை உருவாகும்,வாயு தொல்லை உண்டாகும், அசீரணம் பிரச்சனைகள் உண்டாகும். 

தங்களுக்கு பித்தப்பை கல் இருப்பது உறுதியானால் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்:-


  • அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

  • பசித்தால் மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

  • ஃப்ரிட்ஜியில் வைத்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

  • பரோட்டா, ஃபிரைட் ரைஸ், மக்ரோனி, நூடுல்ஸ் பீசா, பர்க்கர் போன்ற மைதா மாவில் செய்யும் உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களாக இருந்தால் இந்த உணவுகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்து கொள்ளுங்கள்.
  • மேலும் புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் தங்களுக்கு இருக்கிறது என்றால் கட்டாயமாக தவிர்த்து கொள்ள வேண்டும்.

பித்தப்பை கல் நீங்க மருத்துவம்:

  • நெருஞ்சில் இலையை பொடிசெய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம். 
  • எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு  மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். 
  • ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து, இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம்  குடிக்கவும்.
  • கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரனக் கோளறு, குடற்புண் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

உண்ண வேண்டிய கீரைகள்

முளைக்கீரை, சாட்டரணை, யானை நெருஞ்சி, சிறு நெருஞ்சி, கூடவே வாழைத்தண்டு ஆகியவை மிகவும் பலன் தரும் 

சிறு குறிப்பு:


வாழைத்தண்டு நல்லதுதான். ஆனால் பலர் தினமும் வாழைத்தண்டு சாறு சாப்பிடுகிறார்கள். அது தவறு. உடலில் உள்ள உயிர்சக்தியை உறிஞ்சிவிடும்.15 நாட்களுக்கு ஒருமுறை வாழைத்தண்டு பொரியல் செய்து மருந்தாக ஒரு கரண்டி சாப்பிடவும். பலன் உண்டு. மற்றபடி மேலே சொன்ன கீரைகளை நீங்கள் வாரம் இருமுறை தாரளமாக சாப்பிடலாம்.

காய்கறிகள்


பூசணிக்காய், நூக்கல், வெள்ளை முள்ளங்கி, கோவைக்காய்.

பழங்கள்


ஆப்பிள், சாத்துக்குடி, அன்னாசிப்பழம், மாதுளம்பழம், ஆரஞ்சு, கொய்யா ஆகியவற்றை நன்கு மென்று சாப்பிடவும். கூடவே கரும்புச்சாறு குடிக்க மறக்காதீர்கள்.

கரிசலாங்கண்ணி கீரை


கரிசலாங்கண்ணி கீரையை பச்சையாகவோ, சமையல் செய்தோ, தினம் தினம் உட்கொண்டால், பித்தப்பை கற்கள், சிறுநீரகக் கற்கள் ஒரு கட்டத்தில் கரைந்து மறைந்தேவிடும்.இந்த கீரையின் மகிமையை வள்ளலார் திருவருட்பா வசன பாகத்தில், கரிசாலையும், தூதுவளையும் என்ற தலைப்பில் அருமையாக விளக்கியுள்ளார்.
அதாவது, கரிசலாங்கண்ணி கீரையை தினம் உட்கொண்டால் ஆயுள் நீடிக்கும். பித்தப்பையில், சிறுநீரகத்தில் உருவாகியுள்ள கற்களை அகற்றி பித்தப்பை, சிறுநீரகப்பையை சிறப்பாக இயங்கச் செய்யும்.
கரிசலாங்கண்ணி கீரையில் உள்ள பழுப்பு இலைகளை நீக்கி, நீரில் கழுவி வாயில் போட்டு மென்று, சாற்றை விழுங்கி, சக்கையைப் பல் தேய்க்கவும். தவிர, வாய் முழுவதும் நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய்த்தால், மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அந்நேரமே வெளியாகும்.


பித்தப்பை கெட்டுப்போய், அதில் கற்களும் இருந்தால், அந்நேரமே பித்தம் வெளியேறும். அதிலுள்ள கற்கள் வாந்தி மூலமோ, மலத்தின் மூலமோ வெளியேறும். சிறுநீரகம் சுத்தப்படும். சிறுநீர்ப்பையில் கற்கள் இருந்தால், அவை சிறுநீரில் கரைந்து வெளியேறும். இது முற்றிலும் உண்மை. இதனை உலகுக்கு தன் பாடல் மூலம் தந்தவர் வள்ளலார். ஆனால், உலகம் இதனை இன்னும் உணரவில்லை. இன்று குமுதம் சிநேகிதி மூலம் வாசகர்கள் அனைவரும் இதன் மகிமையை உணர வாய்ப்பு வந்துள்ளது.


கரிசலாங்கண்ணி கீரையை உண்டால், கபநீர் வெளியேறுவதால் – சுவாசப்பையும், நுரையீரலும், பித்தநீர் வெளியேறுவதால் – கல்லீரலும் பித்தப்பையும், மலம் வெளியேறுவதால் – பெருங்குடலும், நீர் பிரிவதால் சிறுநீர்ப்பையும் சுத்தமடைகின்றன.

வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காயில் புளிப்புத்தன்மையை விட காரத்தன்மை பொருந்திய தாதுப்பொருட்கள் அதிகமுண்டு. குறிப்பாக, பொட்டாசியம் அதிகமுண்டு. மூத்திரக்காய் (சிறுநீரகம்) நன்றாக இயங்க வெள்ளரிக்காய் உதவும். நீர் நன்றாக குடித்தால் சிறுநீர்ப்பையில் கற்கள் சேராது. சேர்ந்தாலும் சிறுநீரில் பிரிந்து வந்துவிடும்.


சிவப்பு குடைமிளகாய்


குடமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும் வைட்டமின் சி, ஏ, பி மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இதனை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள். சிறுநீர்க் கற்கள் வராமல் தடுக்கும்.


முட்டைகோஸ்
முட்டைகோஸில் வைட்டமின் ‘கே’ வைட்டமின் ‘சி’, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இது, சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பையைச் சுத்தப்படுத்தும். எனவே, முட்டைகோஸை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவில் சேருங்கள் சிறுநீர்ப்பையிலுள்ள கற்கள் கரையும். சிறுநீரகம் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.


பூண்டு


பூண்டை, குழம்பாகவோ பூண்டு தோசையாகவோ அல்லது வெறுமனே எண்ணெயில் வதக்கியோ சாப்பிடலாம். சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள், கற்கள் இரண்டையும் வெளியேற்றும் சக்தி பூண்டுக்கு உண்டு.


வெங்காயம்


பொட்டாசியம் குறைவாகவும், குரோமியம் அதிகமாகவும் வெங்காயத்தில் உள்ளது. இதனால் வெங்காயம் சாப்பிட்டாலும் சிறுநீரகங்கள் நன்கு இயங்கும். சிறுநீரகக்கற்கள், நச்சுப் பொருட்கள் வெளியேறும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் நம் பாட்டிகளின் ஹெல்த் சீக்ரெட் இப்போது தெரிகிறதா?


பீட்ரூட்


இதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதால் சிறுநீரகத்தில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றும்.


கத்தரிக்காய்


எளிதில்  கிடைக்கும் காய்கறி  இது. தினமும் இதை உணவில் சேருங்கள். சிறுநீரகப்பை நன்றாக சிறப்பாக இயங்கும்.

பேரிக்காய்


சிறுநீரகம், சிறுநீரகப் பையில் உள்ள நச்சு பொருட்களை அகற்றும் தன்மை கொண்டது பேரிக்காய். இதை வாரம் இருமுறை சாப்பிடலாம்.


தண்ணீர்


சிறுநீரகம், பித்தப்பையின் கழிவுகளை வெளியேற்ற உடல் தாகமாக தண்ணீர் கேட்கும். ஆனால், நாம் அந்த உடல் மொழியை அலட்சியப் படுத்துகிறோம். இது தவறு. தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடியுங்கள். பித்தப்பை, சிறுநீரகப்பை சிறப்பாக இயங்கும்.


காபி
அளவுக்கு அதிகமாக காபி சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் நச்சுத் தன்மை உருவாகும். பின் அது கற்களாக மாறும். எனவே காபி குடிப்பதற்கு பதில் இஞ்சி டீ குடியுங்கள். பித்தப்பை சுத்தமாகும்.
உங்கள் உடல் நலனுக்காக கொஞ்சம் அக்கறை எடுத்து, மேலே குறிப்பிட்ட உணவுகளை உண்ணுங்கள் அத்துடன் ஜானுசீராசனத்தையும் செய்யுங்கள் பித்தப்பை, சிறுநீரகத்தில் கற்கள் என்ற பேச்சுக்கே இனி இடமிருக்காது.