நடப்பு ஹிஜ்ரி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புனித ரவ்தாவில் பிரார்த்தனை!

நடப்பு ஹிஜ்ரி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புனித ரவ்தாவில் பிரார்த்தனை!

ரியாத்: நடப்பு ஹிஜ்ரி ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மஸ்ஜிதில் உள்ள புனித ரவ்தாவில் மூன்று மில்லியனுக்கும் அதிகமானோர் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் 2,273,033 பெண்கள் மற்றும் 1,149,364 ஆண்கள் ஆவர் என கூறப்பட்டுள்ளது.

புனித ரவ்தா, அதாவது புனித அறைக்கும் (நபியின் வீடு என்று அழைக்கப்படுகிறது) மற்றும் நபியின் மிம்பர் (பிரசங்க மேடை) ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.  இந்த மஸ்ஜிதின் தென்கிழக்கு பகுதியில்தான் நபிகள் நாயகத்தின்  வீடு ஒரு காலத்தில் இருந்தது, அங்கு அவர் தனது மனைவி ஆயிஷா பின்த் அபு பக்கருடன் வசித்து வந்தார்கள். அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டார்கள். இது முஸ்லீம்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும்.

மொத்தமாக 4,125,257 பார்வையாளர்கள் நபி மற்றும் அவரது இரண்டு தோழர்களான அபுபக்கர் அல்-சித்திக் மற்றும் உமர் இபின் அல்-கத்தாப் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர்.

அதே காலகட்டத்தில் மஸ்ஜிதுக்கு வருகை தந்தவர்களுக்கு 8,25,000 இப்தார் உணவுகள் வழங்கப்பட்டன, மேலும் 1.2 மில்லியன் வழிபாட்டாளர்கள் இணையதளங்கள், சேனல்கள் மற்றும் தரைவழியாக வழங்கப்பட்ட பத்து வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு சேவைகளால் பயனடைந்தனர்.