சவுதி தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் சார்பில் பாராட்டு!
ரியாத்: சவுதி அரேபிய தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் கவுரவித்தது. சவூதி அரேபியா நடத்திய முதல் தேசிய விளையாட்டுப் போட்டியில் கோழிக்கோடு கொடுவள்ளியைச் சேர்ந்த கதீஜா நிசா, ஹைதராபாத்தை சேர்ந்த மெஹத் ஷா ஷேக் ஆகியோர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இருவரும் ரியாத்தில் உள்ள நியூ மிடில்ஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கின்றனர். தங்கப் பதக்கத்துடன் 10 லட்சம் ரியால்களையும் அவர்கள் வென்றனர்.
ரியாத்தில் உள்ள தூதரக தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வெற்றி பெற்றவர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். சவூதி அரேபியாவில் இருவரின் இந்த சாதனை இந்தியாவுக்கு மிகவும் பெருமை அளிப்பதாக தூதரக துணை தூதர் என். ராம் பிரசாத் கூறினார். இவ்விழாவில் தூதரக அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் மற்றும் வெற்றியாளர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.